இன்று திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சென்றால் என்ன பலன் தெரியுமா ?

இன்று திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சென்றால் என்ன பலன் தெரியுமா ?

இன்று திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சென்றால் என்ன பலன் தெரியுமா ?
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.

எந்த நாளில் கிரிவலம் சென்றால் என்ன பலன்

வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

  • திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
  • செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும்.
  • புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
  • வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும்.
  • சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும்.
  • ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று (18-03-2022) மதியம் 2 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஆகும்.

Tags:
Next Story
Share it