மகள் வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்திய இயக்குநர் ஷங்கர்!?

மகள் வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்திய இயக்குநர் ஷங்கர்!?

மகள் வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்திய இயக்குநர் ஷங்கர்!?
X

இயக்குநர் ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரின் மகன் ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.

தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது.

aishwarya shankar

பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்திருந்தார். கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

கொரோனா குறைந்து ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து வரும் மே 1ஆம் தேதி ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு நடைப்பெறுவதாக இருந்தது.

Aishwarya-Shankar

ஷங்கரும், அவரது மனைவியும் திரையுலகினரை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it