1. Home
  2. விளையாட்டு

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தேசியக்கொடியை அவமதித்தாரா..?

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தேசியக்கொடியை அவமதித்தாரா..?

கொரோனா ஊரடங்கு காரணமாக 2018-ம் ஆண்டுக்கு பின் மூன்று ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த ஆசிய கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஆங்காங் ஆகிய 6 நாடுகள் விளையாடுகின்றன.

நடப்பு ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

Jaishah

தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி, ஜடேஜா, ஹர்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். பிசிசிஐ செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போட்டியை காண துபாய் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். ஜெய்ஷா வின் அருகில் இருக்கும் நபர் அவரிடம் தேசிய கொடியை கொடுக்கிறார், ஆனால் ஜெய்ஷா அதனை வாங்க மறுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் ஒருவர், “இதுவே பாஜகவைச் சாராத நபர் ஒருவர் இந்தியக் கொடியை ஏந்த மறுத்திருந்தால் பாஜக தொழில்நுட்ப பிரிவு சுறுசுறுப்பாகி சம்பந்தப்பட்ட நபரை தேச விரோதி என்று கூறியிருக்கும். மோடி ஆதரவு ஊடகங்களுக்கு நாள் முழுவதும் விவாத மேடைகளை நடத்தியிருக்கும். அதிர்ஷ்டவசமாக அது ஷாஹின்ஷாவின் (பேரரசரின்) மகன் ஜெய் ஷா ஆகிவிட்டார்” என்று கிண்டல் தொனியில் பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like