1. Home
  2. தமிழ்நாடு

இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் !!

இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் !!


திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு அண்மைக்காலமாக பக்தர்களின் வருகை பெரியளவில் அதிகரித்துள்ளது. அதாவது கோடை விடுமுறை காரணமாக உள்ளூர், வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். இதனால் பக்தர்கள் சுமார் 25 மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை முதல் அதிக அளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 4 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.

இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் !!

இதனால் தற்போது வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால். அதேநேரத்தில் பக்தர் ஒருவருக்கு 3 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி ,ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like