17 வருடம் காத்திருந்த பக்தர்.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம்..!

17 வருடம் காத்திருந்த பக்தர்.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம்..!

17 வருடம் காத்திருந்த பக்தர்.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம்..!
X

சேலம் மாவட்டம், அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசிப்பவர் ஹரிபாஸ்கர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வஸ்திர சேவை தரிசனத்திற்காக 2 பேருக்கு 12,250 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்தார்.

அவருக்கு, எஸ்.எல்.நம்பர் ஒதுக்கப்பட்டு, 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தரிசனத்திற்கான ரசீதும் கொடுக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, மேல் சாத்து வஸ்திர சேவை தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

பின்னர், அந்த வாய்ப்பு இல்லை என்றும், தற்போது பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என்றும் தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது. இதனால், 17 ஆண்டுகள் காத்திருந்தும் ஹரி பாஸ்கருக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கறிஞர் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட் நீதிபதி, ‘திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வஸ்திர சேவை தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இந்த தரிசனத்திற்காக செலுத்திய 12,250 ரூபாயையும் இரண்டு மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். தவறினால், 6 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.

Tags:
Next Story
Share it