1. Home
  2. தமிழ்நாடு

காலி மது பாட்டில் வாங்கும் தேதி.. ஐகோர்ட்டில் தெரிவித்தது அரசு..!

காலி மது பாட்டில் வாங்கும் தேதி.. ஐகோர்ட்டில் தெரிவித்தது அரசு..!


மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் காலியான கண்ணாடி பாட்டில்களை வீசிச் செல்வதால் அவற்றை விலங்குகள் மிதித்து காயமடைகிறது.

அதனால் ஏற்படும் காயம் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 25-ம் தேதிக்குள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெற மாற்றுத் திட்டம் வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு, தமிழக அரசின் சார்பில் கூடுதல் செயலாளர் எஸ்.கே பிரபாகர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட வேண்டும்.
காலி மது பாட்டில் வாங்கும் தேதி.. ஐகோர்ட்டில் தெரிவித்தது அரசு..!
காலி மதுபாட்டில்களை மீண்டும் மதுபான கடைகளில் திருப்பி செலுத்தினால் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்பட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில், இந்த மது பாட்டில் நீலகிரியில் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கான முத்திரை இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து, மலை வாசஸ்தலங்கள், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like