இவர்களுக்கான தரிசனம் ரத்து.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

இவர்களுக்கான தரிசனம் ரத்து.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

இவர்களுக்கான தரிசனம் ரத்து.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!
X

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி சென்று சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (13-ம் தேதி) முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags:
Next Story
Share it