டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி திடீரென மாற்றம் !

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி திடீரென மாற்றம் !

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி திடீரென மாற்றம் !
X

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 626 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

exam

அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it