1. Home
  2. தமிழ்நாடு

கடலூரில் பரபரப்பு.. பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்.. கைது செய்யக்கோரி சாலை மறியல்..!

கடலூரில் பரபரப்பு.. பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்.. கைது செய்யக்கோரி சாலை மறியல்..!


கடலூர் அடுத்த வெள்ளக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, வெள்ளக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் ஒருவருக்கொருவர் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, தாக்கிக் கொண்டனர்.

அவர்களில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் பள்ளிக்குள் புகுந்து வேறொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், காயமடைந்த 4 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே, பள்ளி வளாகத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவ - மாணவியர் வகுப்பை புறக்கணித்து பள்ளிக்கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like