கொடூரம்.. நண்பனை கொன்று சடலத்துடன் செல்பி எடுத்து ரசித்த ரவுடி !

கொடூரம்.. நண்பனை கொன்று சடலத்துடன் செல்பி எடுத்து ரசித்த ரவுடி !

கொடூரம்.. நண்பனை கொன்று சடலத்துடன் செல்பி எடுத்து ரசித்த ரவுடி !
X

நண்பனை கொன்று சிதைந்த முகத்துடன் கூடிய சடலத்துடன் செல்பி வீடியோ எடுத்து ரசித்த ரவுடி சிக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகர் பகுதியில் தலை நசுங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஒருவர் செல்பி எடுத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புகைப்படம் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வீடியோ பகிரப்பட்ட நம்பரை வைத்து மணலி புதுநகரை சேர்ந்த பிரபல ரவுடி ஆறுவிரல்மதனை(27) பிடித்து விசாரித்தபோது அவர்தான் கொலை செய்தார் என்று தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், மணலி புது நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(32). இவருக்கும் ரவுடி ஆறுவிரல் மதனுக்கும் தகராறு இருந்துள்ளது. இதன்பின்னர் இருவரும் சமாதானமானதுடன் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இருப்பினும் மோதல் பிரச்னையை மதன் மறக்காமல் ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்துள்ளார்.

gfd

இதன்படி, நேற்று மதியம் மதன் தனது கூட்டாளிகளான ரவிச்சந்திரன், மணலி புதுநகரை சேர்ந்த குத்தா(24), பரத் (26), பப்லு (27) ஆகியோரை மது குடிக்கலாம் என்று கூறி, மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போதை ஏறியதும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ரவிச்சந்திரன் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பின்னர் அங்கு கிடந்த ஒரு பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டு நசுக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். ரத்தவெள்ளத்தில் ரவிச்சந்திரன் இறந்ததும் ரவுடி மதன், அந்த காட்சியை தனது செல்போனில் செல்பி எடுத்து கூட்டாளிகளுக்கு அனுப்பியுள்ளார். இதன்பின்னர் அவர்கள், அந்த செல்பியை சமூக வலைதளங்களில் ஏராளமானோருக்கு அனுப்பி பரப்பியுள்ளனர், என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மணலி புதுநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மதன், அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it