1. Home
  2. வர்த்தகம்

கிரெடிட் கார்டு பில் தில்லுமுல்லு.. கண்டறிவது எப்படி..?

கிரெடிட் கார்டு பில் தில்லுமுல்லு.. கண்டறிவது எப்படி..?

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு ஒவ்வொரு பில்லிங் காலத்தின் முடிவிலும் கிரெடிட் கார்டு பில்லை பெறுவீர்கள். உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் பிழைகள் இருக்கலாம்.

அவற்றை கண்டுபிடிக்கவில்லை என்றால், அதிகமாக பணம் செலுத்தலாம். அல்லது, தேவையில்லாமல் நிதிச் சிக்கலில் சிக்கலாம்.

உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பிழைகளைத் தவிர்ப்பது எப்படி? தாமதமாகும் முன் பிழைகளைச் சரிபார்க்க வேண்டும்.

எனவே, உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பிழைகள் உங்களை நிதி ரீதியாக பாதிக்கும் முன் அவற்றை கண்டறிய உதவும் சில முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம்.

கிரெடிட் கார்டு பில்களை எவற்றையெல்லாம் பார்ப்பது அவசியம்:

கிரெடிட் கார்டு பில்லில் நீங்கள் சரிபார்க்க வேண்டிய முக்கியமான புள்ளிகள் தெரியாமல் பிழைகளைக் கண்டறிய முடியாது.

1. முதலில் கிரெடிட் கார்டு பில்லில், முகவரி, உங்கள் பெயர், கார்டு வரம்பு, பயன்படுத்தப்பட்ட வரம்பு, கடைசி பணம், நிலுவை தேதி, குறைந்தபட்சத் தொகை, அனைத்து பரிவர்த்தனைகள் மேற்கொண்ட தேதி மற்றும் தொகை, உங்கள் கிரெடிட் கார்டில் குவிந்துள்ள ரிவார்டு புள்ளிகள் போன்றவற்றை கட்டாயம் சரிபார்க்கவும்.

2. அதில் முக்கியமாக, உங்கள் கிரெடிட் கார்டு பில்களை தவறாமல் சரி பார்ப்பது மிகவும் அவசியம்.

3. நீங்கள் உபயோகிக்கும் கிரெடிட் கார்டு நிறுவனம் உங்களிடமிருந்து எத்தனை வகையான கட்டணங்களை வசூலித்துள்ளது எனப் பார்க்க வேண்டும்.

4. மிகவும் முக்கியமாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (terms and conditions) படித்துப் பார்ப்பது அவசியம்.

5. உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டுடன் உங்கள் கார்டு விவரங்களை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.

இதெல்லாம் பார்க்க நேரமில்லை என நீங்கள் நினைத்தால், நீங்கள் உபயோகிக்கும் பணத்தைவிட அதிகமாக செலுத்த வேண்டி வரும். ஆகவே இதெல்லாம் படித்து வைத்து, தொடர்ச்சியான சரிபார்ப்புகள் மூலம் அதிகப்படியான பணம் செலுத்துவதை தவிர்க்கலாம்.

Trending News

Latest News

You May Like