மம்தா ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை..!!

மம்தா ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை..!!

மம்தா ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை..!!
X

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கும் வகையில் இருந்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது பாஜக தலைவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்துக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொல்கத்தா மாநிலம் சிலிகுரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 3 வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நினைத்தோம், அவரது ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை; இங்கு எதாவது சம்பவம் நடந்தால் ஒரு தூக்குழுவை அனுப்பும் மம்தா பானர்ஜி, பீர்முக்கில் 8 பெண்களும், ஒரு குழந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டதற்கு ஏன் அனுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்தச்சட்டத்தை நாங்கள் நடைமுறையில் அமல்படுத்துவோம் என்றார்.

Next Story
Share it