கொரோனா பரவல் அதிகரிப்பு.. 40 ரயில் நிலையங்கள் மூடல்..!

கொரோனா பரவல் அதிகரிப்பு.. 40 ரயில் நிலையங்கள் மூடல்..!

கொரோனா பரவல் அதிகரிப்பு.. 40 ரயில் நிலையங்கள் மூடல்..!
X

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரைப் போல தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அந்த நகரின் 40 சுரங்க ரயில் நிலையங்கள் நேற்று முதல் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்த நிலையங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை. பெய்ஜிங்கில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்ததை அடுத்து, அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it