களிமேடு தேர் விபத்தில் இறந்தோருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்..!

களிமேடு தேர் விபத்தில் இறந்தோருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்..!

களிமேடு தேர் விபத்தில் இறந்தோருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்..!
X

தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்தில் இறந்தோருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது, உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசிய போது, “தஞ்சை களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுளேன். களிமேடு தேர்த் திருவிழா விபத்து தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன்” என அவர் கூறினார்.

Next Story
Share it