அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்.. தமிழக அரசு தகவல்..!

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்.. தமிழக அரசு தகவல்..!

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்.. தமிழக அரசு தகவல்..!
X

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கபட்டுள்ளது என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘தமிழகத்தில் விளையாட்டு பாடத் தேர்வில் செய்முறை, எழுத்து முறை என தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கபட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

Next Story
Share it