கல்லூரி மாணவிகளுக்கு காலையில்.. அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்..!

கல்லூரி மாணவிகளுக்கு காலையில்.. அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்..!

கல்லூரி மாணவிகளுக்கு காலையில்.. அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்..!
X

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மே 10-ம் தேதி வரை மொத்தம் 22 நாள்கள் நடைபெறவுள்ளன.

இன்று (29-ம் தேதி) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக, இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க மாணவிகளுக்கு காலையிலும், மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Next Story
Share it