சாலையில் கல்லூரி மாணவிகள் கடும் மோதல்.. வேதனை அடைந்த மக்கள் !!

சாலையில் கல்லூரி மாணவிகள் கடும் மோதல்.. வேதனை அடைந்த மக்கள் !!

சாலையில் கல்லூரி மாணவிகள் கடும் மோதல்.. வேதனை அடைந்த மக்கள் !!
X

புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் சிலர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

girls fight

இந்த வாக்குவாதம் முற்றி சில நிமிடங்களில் மோதலாக மாறியது. மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடு்பட்டுள்ளனர். அப்போது ஆபாசமாகவும் அறுவருக்க தக்கவகையிலும் மாணவிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அங்கிருந்த சக கல்லூரி மாணவமாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமிப்பி சண்டையாக மாறியுள்ளது. மாணவிகளின் சண்டை காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

girls fight

இந்த சம்பம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர். இதனால் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

newstm.in


Next Story
Share it