1. Home
  2. தமிழ்நாடு

கோவை காவல் தெய்வத்தின் தேர் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!!

கோவை காவல் தெய்வத்தின் தேர் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!!

கோவை காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேரோட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 14ஆம் தேதியில் முகூர்த்த காலுடன் துவங்கிய விழா 22ஆம் தேதி கொடியேற்றபட்டது.தொடர்ந்து கோனியம்மன் நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாலித்தார்.அம்மன் திருக்கல்யாணம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மார்ச் 2ஆம் தேதி மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.. அதன்படி ராஜவீதி தேர்திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடைந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் மீது உப்பு வீசி வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி பரிவேட்டை, குதிரைவாகன உலா, 4ஆம் தேதி தெப்ப உற்சவமும், 5ஆம் தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மேலும் மார்ச் 6ஆம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர்திருவிழா நிறை வடைகிறது.

இந்த நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள அத்தர் ஜாமத் பள்ளி வாசல் முன்பாக நின்றிருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அனைவரையும் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..

Trending News

Latest News

You May Like