1. Home
  2. தமிழ்நாடு

சிமென்ட் விலை உயர்வு.. கட்டுமான பணிகள் முடங்க வாய்ப்பு..!

சிமென்ட் விலை உயர்வு.. கட்டுமான பணிகள் முடங்க வாய்ப்பு..!


தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதால் கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிமென்ட் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிமென்ட் விலை மேலும் உயர்ந்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் காரணமாக ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்ய 60 முதல் 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், வட இந்தியாவில் சிமென்ட் விலை 14 சதவிகிதம் அதிகரித்து ஒரு மூட்டை 431 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சிமென்ட் விலை 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்து ஒரு மூட்டை 400 ரூபாய் வரை விற்பனையாகிறது.

அதேபோல், மேற்கிந்திய பகுதிகளில்12 சதவிகிதமும், கிழக்கிந்திய பகுதிகளில் 14 சதவிகிதம் வரையும் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு போல, சிமென்ட் விலையும் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like