1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 30 நிமிடத்தில் கார் லோன்..!! ஹெச்டிஎப்சி வங்கியின் அசத்தல் திட்டம்...!!

வெறும் 30 நிமிடத்தில் கார் லோன்..!! ஹெச்டிஎப்சி வங்கியின் அசத்தல் திட்டம்...!!


நாட்டில் வங்கியின் கார் கடன் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வங்கி இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி தனது ஆன்லைன் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கார் கடனை வழங்குகிறது. அத்தகைய வாக்குறுதியை செயல்படுத்தும் முதல் வங்கி ஹெச்டிஎப்சி என்றும் கூறுகிறது.

இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது. வீட்டுக் கடனுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் பணமாக கார் கடன் உள்ளது. அதனால் தான் வங்கி இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.பொது வங்கி நடைமுறைகளின்படி, கார் கடனைப் பெறுவதற்கு சராசரியாக 48-72 மணிநேரம் ஆகும்.

வங்கியை அணுகாமல் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் இத்திட்டத்தின் மூலம் 2023-ஆம் நிதியாண்டில் ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை கார் கடன் வழங்குவதாக, ஆன்லைன் விரைவுக் கடன் சேவை மூலம் வங்கி அறிவித்துள்ளது.கார் கடனுக்கு மட்டுமின்றி இரு சக்கர வாகனக் கடனுக்கும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தப் போவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like