1. Home
  2. வர்த்தகம்

போல்டிங் டைப் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

போல்டிங் டைப் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம் புதிதாக அடுத்த தலைமுறைக்கான மடக்கும் வகையிலான (போல்டபிள்) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 4 என்ற பெயரில் இவை வந்துள்ளன. உயர் தரத்திலான செல்ஃபி எடுக்க வசதியாக இதன் கேமராவின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வீடியோ பதிவு செய்யவும் இதில் எளிய வசதி உள்ளது.

இதில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் தலைமுறை பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகள் மிகவும் துல்லியமாக பதிவாகும். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்பது, காரின் செயல்பாடுகளை நிர்ணயிப்பது போன்ற வசதிகள் உள்ளன.

3,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 எல் இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தால் சிறப்பாக பெரிய திரைக்கென தயாரிக்கப்பட்ட இயங்குதளமாகும்.

இதில் எஸ் பேனா உள்ளது. படம் வரைவது மற்றும் குறிப்புகளை எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இதன் பிரதான திரை 7.6 அங்குலமாகும். இதன் மேல்பாகம் அலுமினியத்தாலும், திரை கொரில்லா கண்ணாடியாலும் ஆனது.

இதில் வெளிப்புற இரைச்சலைத் தவிர்க்கும் ஏ.என்.சி. நுட்பம் உள்ளது. இதனால் மறுமுனையிலிருந்து அழைப்பவரின் பேச்சை துல்லியமாகக் கேட்க முடியும். பர்ப்பிள், கிராபைட், இளஞ்சிவப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like