உயர்கிறது பீர் விலை.. எவ்வளவு தெரியுமா..?

உயர்கிறது பீர் விலை.. எவ்வளவு தெரியுமா..?

உயர்கிறது பீர் விலை.. எவ்வளவு தெரியுமா..?
X

மதுபான வகைகளில் ஒன்றான பீர் உற்பத்திக்கு பார்லி மிகவும் முக்கியமான மூலப்பொருளாகும். உலகின் ‘டாப் 5’ பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பார்லி விலை உயர்ந்துள்ளதுடன், வரத்து குறைந்து அதிகப்படியான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால், பீர் விலையை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பீர் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், “பீர் தயாரிப்புக்கு தேவையான பார்லி உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பீர் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

பார்லியின் விலை 65 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்துடன் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பீர் ரகங்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளன.

Next Story
Share it