1. Home
  2. தமிழ்நாடு

மிஸ்டு கால் கொடுத்தால் பீஸ்ட் டிக்கெட்…. ஆனால் விலை என்ன தெரியுமா?

மிஸ்டு கால் கொடுத்தால் பீஸ்ட் டிக்கெட்…. ஆனால் விலை என்ன தெரியுமா?


ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புக்கிங் துவங்கிய ஒரு சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. சில புரோக்கர்கள் பாதி டிக்கெட்டுகளையும், மீதி டிக்கெட்டுகளை தியேட்டர் உரிமையாளர்களும் புக் செய்து முடித்து விட்டனர்.

இதனால், நியாயமான டிக்கெட் விலையில் படம் பார்க்க நினைத்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. 200 ரூபாய்க்கு ரசிகர் ஷோ டிக்கெட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

மிஸ்டு கால் கொடுத்தால் பீஸ்ட் டிக்கெட்…. ஆனால் விலை என்ன தெரியுமா?

ரசிகர் மன்ற நிர்வாகிகளின் 'ஆயிரம் ரூபாய்' டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் டிக்கெட் டெலிவரி என்ற பாணியில் செயல்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை, ரசிகர் ஷோ டிக்கெட் ஆயிரம் ரூபாயாகவும், மற்ற ஷோக்கள், 500 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது.

ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டும்' என்பதற்காக உருவாக்கப்பட்ட ரசிகர்கள் ஷோ, தற்போது வணிகமயமாகிவிட்டது. அந்த அளவுக்கு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

மிஸ்டு கால் கொடுத்தால் பீஸ்ட் டிக்கெட்…. ஆனால் விலை என்ன தெரியுமா?

அவர்கள் மலிவு விலையில் தியேட்டர்களில் டிக்கெட் வாங்கி அதனை ஆயிரம் ரூபாய் விற்று லாபம் பார்க்கின்றனர். அப்பாவி ரசிகர்கள், வெறும், 200 ரூபாய் டிக்கெட்டை, ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி ஏமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like