1. Home
  2. தமிழ்நாடு

மே மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..!!

மே மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..!!


மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம், அன்றைய தினம் பொது விடுமுறை என்பதும் நாம் அறிந்த செய்திதான். ஆனால், இந்த ஆண்டு மே தினம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

மே 3ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு பொது விடுமுறை என்றாலும் கூட, பிறை தெரிவதைப் பொறுத்து இந்தப் பண்டிகையை கொண்டாடும் நேரம் மாறுபடக் கூடும்.

மேற்கண்ட இரண்டு பொது விடுமுறை தினங்களிலும் வங்கிகள் இயங்காது என்பதோடு, மேலும் சில தினங்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினம் வருகிறது.

மே மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..!!

ஒவ்வொரு மாநிலம் அல்லது இனம் சார்ந்த பண்டிகைகளுக்காகவும் தொடர்புடைய பகுதிகளில் மட்டும் வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது.

மே 1 - ஞாயிற்றுக்கிழமை - உழைப்பாளர் தினத்தை ஒட்டி நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.

மே 2 - திங்கள்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும்.

மே 3 - செவ்வாய்க்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதிலும் விடுமுறை.

மே 8 - ஞாயிற்றுக்கிழமை - நாடெங்கிலும் வார இறுதி விடுமுறை.

மே 9 - திங்கள்கிழமை - ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா - மேற்கு வங்கம் மட்டும்.

மே 14 - சனிக்கிழமை - இரண்டாம் சனிக்கிழமை அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.

மே 15 - ஞாயிற்றுக்கிழமை - வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.

மே 16 - திங்கள்கிழமை - புத்த பூர்ணிமா - நாட்டின் ஒரு சில பகுதிகளில் விடுமுறை.

மே 22 - ஞாயிற்றுக்கிழமை - வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் விடுமுறை.

மே 28 - சனிக்கிழமை - நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

மே 29 - ஞாயிற்றுக்கிழமை - நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.

newstm.in

Trending News

Latest News

You May Like