இந்த செயலிகளுக்கு தடை.. ஆண்ட்ராய்டு போன்களில் இனி ரெக்கார்ட் செய்ய முடியாது..!

இந்த செயலிகளுக்கு தடை.. ஆண்ட்ராய்டு போன்களில் இனி ரெக்கார்ட் செய்ய முடியாது..!

இந்த செயலிகளுக்கு தடை.. ஆண்ட்ராய்டு போன்களில் இனி ரெக்கார்ட் செய்ய முடியாது..!
X

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் குகூள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்நிலையில், போட்டி இயங்குதளமான ஆப்பிள் ஓஎஸ் இல்லாத அம்சங்கள் பலவற்றை ஆண்ட்ராய்டு கொண்டுள்ளது.

பயனர்களுக்கு எளிதில் விளங்கக்கூடிய வகையில் இதன் பயன்பாடு இருப்பதால், மக்கள் ஆண்ட்ராய்டு நிறுவப்பட்ட ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆண்ட்ராய்டு போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது மிகவும் எளிது.

ஸ்மார்ட்போனின் கூடவே டையரில் நிறுவப்பட்ட ரெக்கார்டிங் அம்சங்கள் ஆனாலும் சரி, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் அழைப்புகள் மூலம் அழைப்புகளை பதிவு செய்வதாக இருந்தாலும் சரி. ஆண்ட்ராய்டுக்கு நிகர் அது மட்டும் தான் என்றிருந்தது.

ஆனால், பயனர்களில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கூகுள் புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் அதன் பிளே ஸ்டோர் கொள்கைகளை மாற்றி அமைத்திருக்கிறது.

மாற்றி அமைக்கப்பட்ட கொள்கை விதிகள் வரும் மே 11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என குகூள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கூகுள் மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை விதிப்பதாக தனது புதிய கொள்கைகளை வகுத்துள்ளது.

இதனால், பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது எனத் தெரியவந்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் இதற்கான முன்னணி செயலிகள் அனைத்தும் நீக்கப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சேகரிக்க சம்பந்தம் இல்லாத வெளி செயலிகளுக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது என கூகுள் கருதுகிறது.

கூகுளின் புதிய ப்ளே ஸ்டோர் கொள்கையின்படி, ரிமோட் கால் ஆடியோ ரெக்கார்டிங்கிற்கான அணுகலை பிற API-க்கள் கோர முடியாது. அதாவது, அழைப்பு பதிவுகளை பெற நிறுவப்படாத பயன்பாடுகள் அனுமதிக்கப்படாது.

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் Truecaller, Automatic Call Recorder, Cube ACR மற்றும் பிற பிரபலமான ஆப்ஸ் வேலை செய்யாது.

உங்கள் ஆண்ட்ராய்டு போனின் டயலரில் அழைப்பு பதிவு செய்யும் அம்சம் இயல்பாக நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் அழைப்பைப் பதிவு செய்யலாம்.

முன்பே நிறுவப்பட்ட அழைப்பு பதிவு செயலிகள் அல்லது சேர்க்கப்பட்ட அம்சங்களுக்கு அணுகல் அனுமதி தேவையில்லை என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதுவரை, கூகுளின் பிக்சல், சியோமி, சாம்சங் போன்களின் டயலர் பயன்பாடுகளில் இயல்பாகவே அழைப்புகளை பதிவு செய்யும் அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, உங்களிடம் இந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தால் பயப்பட தேவையில்லை.

Next Story
Share it