பேச்சலர்ஸ் பாய்ஸ் நாளை காலை கவனம்.. இப்போதே முடிவெடுங்கள் !

பேச்சலர்ஸ் பாய்ஸ் நாளை காலை கவனம்.. இப்போதே முடிவெடுங்கள் !

பேச்சலர்ஸ் பாய்ஸ் நாளை காலை கவனம்.. இப்போதே முடிவெடுங்கள் !
X

சென்னையில் நாளை காலை எந்த உணவகங்களுக்கும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 5 ஆம் தேதி வணிகர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னையில் காலை ஒரு வேளை மட்டும் ஹோட்டல்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருச்சியில் வணிகர்கள் மாநாடு வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், விக்கிரமராஜா கோரிக்கையை ஏற்று ஹோட்டல் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், மதியம் முதல் உணவகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் விருந்தினராக பங்கேற்கும் இந்த மாநாட்டில், எரிபொருள் விலை, காய்கறி உள்ளிட்டவையின் விலையால் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும், வணிக எரிவாயு சிலிண்டரின் கடுமையான விலை உயர்வை கட்டுப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட வாய்ப்புள்ளது.

sampar sathan

காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் நிலை உள்ளது. அவ்வாறு உயர்த்தினால் டீ, காபி முதல் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஹோட்டலில் சாப்பிடுவோருக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

இதனால் ஹோட்டலுக்கு மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டால் ஹோட்டல் நிர்வாகமும் பாதிக்கப்படும். இதனால் விலைவாசி குறைப்பு குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்படலாம் என தெரிகிறது.

newstm.in

Next Story
Share it