இலங்கை சிறையில் பாஜக அண்ணாமலை.. வெளியான புகைப்படம் !!

இலங்கை சிறையில் பாஜக அண்ணாமலை.. வெளியான புகைப்படம் !!

இலங்கை சிறையில் பாஜக அண்ணாமலை.. வெளியான புகைப்படம் !!
X

இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான்கு நாள் பயணமாக இலங்கைக்கு சென்றடைந்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை பணியாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்

கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும், அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

G

மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில் சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளார்.

Newstm.in

Next Story
Share it