1. Home
  2. வர்த்தகம்

#BIG NEWS:- கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் திடீரென நீக்கப்பட்ட பிஜிஎம்ஐ..!!

#BIG NEWS:- கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் திடீரென நீக்கப்பட்ட பிஜிஎம்ஐ..!!

கடந்த 2020 இல் பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு, பப்ஜி இன் புதிய அவதாரமாக BGMI தொடங்கப்பட்டது. இந்த பிஜிஎம்ஐ என்று அழைக்கப்படும் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் திடீரென கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் கேம் பிளேயர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைல் விளையாட்டுகளில் மிக பிரபலமானது பப்ஜி கேம். இந்தியாவில் ஏராளமானோர் பப்ஜி கேமை விளையாடி வந்தனர். பப்ஜிக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் மிகப்பெரிய மார்க்கெட்.கடந்த 2020 ஆம் ஆண்டு பப்ஜி ரசிகர்களுக்கு தலையில் இடி விழுந்தது போல ஒரு செய்தி வெளியானது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இதன்பின்னர், சீனாவுடன் தொடர்புடைய ஏராளமான ஆப்களை இந்திய அரசு தடை விதித்தது. இந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி கேமிற்கும் தடை விதிக்கப்பட்டது.

#BIG NEWS:- கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் திடீரென நீக்கப்பட்ட பிஜிஎம்ஐ..!!

அதன் பின் மீண்டும் வேறு அவதாரத்தில் பப்ஜி கேம் இந்தியாவில் களமிறங்குகிறது. இந்தியாவில் பப்ஜியின் புதிய அவதாரத்துக்கு 'Battlegrounds Mobile India' என பெயரிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் பிஜிஎம்ஐ மொபைல் கேம் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கை பல கேமர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது இருப்பினும், இது அரசாங்க உத்தரவின் கீழ் நிகழ்த்தப்பட்டுள்ள நடவடிக்கை என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனம் வழியாக வெளியான அறிக்கையில், இந்த நடவடிக்கை கிடைத்த உத்தரவை பின்தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிராஃப்டன் நிறுவனம், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எவ்வாறு அகற்றப்பட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம், அது குறித்த தகவலை பெற்றவுடன் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்று கூறி உள்ளது.

#BIG NEWS:- கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் திடீரென நீக்கப்பட்ட பிஜிஎம்ஐ..!!

பிஜிஎம்ஐ கேம்-ஐ ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட்போன்களில் வைத்திருப்பவர்கள் இப்போதைக்கு இந்த கேமை விளையாடலாம். ஆனால் வரும் நாட்களில் இது தொடர்ந்து விளையாட முடியுமா ? அல்லது முற்றிலுமாக தடை செய்யப்படுமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Trending News

Latest News

You May Like