#BIG BREAKING:- அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா..!!

#BIG BREAKING:- அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா..!!

#BIG BREAKING:- அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா..!!
X

மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எம்.எஸ்.தோனியும் சுரேஷ் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்த இரட்டை ஓய்வு அறிவிப்பு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.தோனியின் ஜெர்சி எண் 7, என்னுடைய ஜெர்சி எண் 3, சேர்த்தால் 73, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆடுகள் நிறைவு என்று எல்லாம் ஒன்று சேர்ந்த தினம் அன்று. எனவே இதை விட சிறந்த நாள் அமையாது என்று ஓய்வு பெற்று விட்டோம் என விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலும் மட்டும் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டிற்காகவும், உத்தரபிரதேசத்திற்காகவும் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று. அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கிறேன். பிசிசிஐ, உபி கிரிக்கெட் சங்கம் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.


Tags:
Next Story
Share it