பரிதாபம்.. கண் எதிரே 3 வயது மகனை பறிகொடுத்த தந்தை..!

பரிதாபம்.. கண் எதிரே 3 வயது மகனை பறிகொடுத்த தந்தை..!

பரிதாபம்.. கண் எதிரே 3 வயது மகனை பறிகொடுத்த தந்தை..!
X

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவருடைய மனைவி சரஸ்வதி (32). இந்த தம்பதிக்கு லித்திஸ் என்ற 3 வயது குழந்தையும், கைக் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் மகன் லித்திஸ் உடன் காளிப்பட்டி கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சேலம் மாவட்டம் பொட்டியாபுரம் கிராமத்தில் இருந்து அம்மாபட்டி கிராமத்திற்கு செங்கல் ஏற்றி வந்த லாரியின் பின் சக்கரத்தில் நிலை தடுமாறி சுரேசும், அவரது 3 வயது மகனும் விழுந்துள்ளனர்.

இதில் லாரியின் பின் சக்கரத்தில் லித்திஸ் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, லாரி டிரைவர் சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (50) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 வயது சிறுவன் தந்தை கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it