வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சென்னையில் 10 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்..!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சென்னையில் 10 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்..!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சென்னையில் 10 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்..!
X

சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை (29-ம் தேதி) முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை சிக்னல் இடது புறம் சென்று அங்குள்ள யூ டர்ன் வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.

செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சிக்னலில் இடதுபுறம் திரும்பி சைதாப்பேட்டை நோக்கி 200 மீட்டர் தூரம் வரை சென்று யூ டர்ன் வழியாக செல்ல வேண்டும்.

பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் பாரதிதாசன் சாலை சிக்னல் இடது புறம் சென்று சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் வரை சென்று திரும்பி செல்ல வேண்டும்.

இது குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை dcpsouth.traffic@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் வாகன ஓட்டிகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it