1. Home
  2. தமிழ்நாடு

அசைவம் சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்.. பல்கலையில் பயங்கரம்..!

அசைவம் சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்.. பல்கலையில் பயங்கரம்..!


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை விதிக்க பாஜக மாணவர் அமைப்பான ஏவிபியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, அசைவ உணவு உண்ணச் சென்ற மாணவர்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
JNU clash: Police awaiting complaint from ABVP to initiate 'necessary  action' | Latest News Delhi - Hindustan Times
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில், ராம நவமியை ஒட்டி நேற்று (10-ம் தேதி) அசைவ உணவு சமைக்க பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே நேரத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ உணவு சமைக்கப்பட்டது. அதனை உண்ணச் சென்ற மற்ற மாணவர்களை ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் தடுத்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி சாப்பிட சென்றவர்களை தாக்கினர்.
அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்.. JNU பல்கலைக்கழகத்தில்  மீண்டும் ABVP அட்டூழியம்!
இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனால், ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, மற்ற அமைப்பு மாணவர்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News

Latest News

You May Like