1. Home
  2. வர்த்தகம்

டெபிட்,கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? வெளியானது புது ரூல்ஸ்..!!

டெபிட்,கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? வெளியானது புது ரூல்ஸ்..!!

நம் அன்றாட வாழ்க்கையில் நிதித் தேவைகளை சமாளிக்க பெரும்பாலான மக்கள் அதிகமாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம்.குறிப்பாக, இளைய தலைமுறையினர், கிரெடிட் கார்டு கடன்களை அதிகமாக வாங்கி வருகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

இந்நிலையில், கிரெடிட் கார்டு பயன்பாட்டை டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் அதிகரிக்கும் வகையில், யூபிஐ தளத்தில் கிரெடிட் கார்டு இணைக்கும் திட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது ஆர்பிஐ .இதன் மூலம் கிரெடிட் கார்டு வைத்துள்ள யூபிஐ வாடிக்கையாளர் அனைவரும் கிரெடிட் கார்டு வைத்துப் பில்களைச் செலுத்த முடியும்.இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது

டெபிட்,கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? வெளியானது புது ரூல்ஸ்..!!

தற்போது ஏடிஎம் கார்டுகளில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது .

இதற்கு முன் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனாளிகள் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஓடிபி தேவையில்லை. 5000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஓடிபி அவசியம்.இப்போது, ஓடிபி தேவைக்கான வரம்பை 15000 ரூபாயாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி, 15000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஓடிபி தேவையில்லை. 15000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஓடிபி கட்டாயம்.

இந்த விதிமுறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like