தமிழகத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. கார் உற்பத்தியை நிறுத்துகிறது நிஸ்ஸான்?

தமிழகத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. கார் உற்பத்தியை நிறுத்துகிறது நிஸ்ஸான்?

தமிழகத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. கார் உற்பத்தியை நிறுத்துகிறது நிஸ்ஸான்?
X

சென்னையில் உள்ள நிஸ்ஸான் ஆலையில் டாட்சன் கார் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிஸ்ஸான் நிறுவனம் சென்னை அருகே ஒரகடத்தில் டாட்சன் ரக கார்களை தயாரித்து வந்தது. இந்நிலையில் சந்தை சூழ்நிலையை அனுசரித்து டாட்சன் வகை கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக நிஸ்ஸான் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட டாட்சன் கார்கள் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

nissian

மேலும் அந்த அறிக்கையில், தங்கள் கார்களுக்கான விற்பனைக்கு பிந்தைய சேவையும் உதிரி பாக விற்பனையும் தொடரும். எனினும் நிஸ்ஸானின் மற்றொரு ரக காரான மேக்னைட்டின் உற்பத்தி மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டாட்சன் கார் உற்பத்தி நிறுத்தப்படுவதால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஃபோர்டு நிறுவனமும் தனது சென்னை ஆலையை மூடப்போவதாக அறிவித்திருந்தது. எனினும் இந்த ஆலையை மின்சார வாகன உற்பத்தி ஆலையாக மாற்றுவது குறித்து ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு பேசி வருகிறது. எனினும் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது நிஸ்ஸானும் மூடப்படுவதால் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

nissian

இந்த கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய தொடர் தாக்கத்தின் விளைவாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது

newstm.in

Next Story
Share it