தஞ்சை தேர்திருவிழா மின் விபத்து போன்று மற்றொரு ஆபத்து.. வைரல் வீடியோ !

தஞ்சை தேர்திருவிழா மின் விபத்து போன்று மற்றொரு ஆபத்து.. வைரல் வீடியோ !

தஞ்சை தேர்திருவிழா மின் விபத்து போன்று மற்றொரு ஆபத்து.. வைரல் வீடியோ !
X

தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலே சென்ற மின்கம்பி மீது தேர் உரைசியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆபத்தை உணராமல் ஆங்காங்கே சிலர் அலட்சியமாக செயல்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் பலரும் வெயிலில் இல்லாமல் மரத்தடி, வீடு, அலுவலகத்திலேயே பெரும்பாலான நேரங்களை கழித்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் மாறாக நகரும் பந்தலுக்குக் கீழ் திருமண ஊர்வலம் ஒய்யாரமாகப் போகும் வீடியோ ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

marriage

தேவயானி கோஹ்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண ஊர்வல வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இதனால் தான் இந்தியா 'கண்டுபிடிப்புகளின் பூமி' என்று அழைக்கப்படுகிறது. எளிமையான ஜூகாத், வெயிலின் கொடுமையை தணிக்க இந்தியர்கள் ஒரு வழிகண்டுபிடித்து விட்டார்கள் என்று எழுதி ஊர்வல வீடியோவை பகிர்ந்துள்ளார்.

marriage

அதில் வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் செல்லும் மணமகன் அழைப்பு ஊர்வலத்தில் கூடவே ஒரு நகரும் பந்தல் ஒன்று செல்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். ஊர்வலம் செல்லும் பாதையில் மின் கம்பிகள் தெளிவாகத் தென்படுகின்றன. இதனால் இப்படியாக நகரும் பந்தலை எடுத்துச் செல்வது ஆபத்தாக அமையலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை மின்கம்பியில் நகரும் பந்தல் உரைசினால் பெரும் அசம்பாவிதம் நிகழும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.


newstm.in

Next Story
Share it