1. Home
  2. விளையாட்டு

பஞ்சாபில் ஆல் ரவுண்டர் லிவிங்ஸ்டன்.. ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு !!

பஞ்சாபில் ஆல் ரவுண்டர் லிவிங்ஸ்டன்.. ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு !!

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் இரண்டாவது நாள் மெகா ஏலம் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. இதில் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட எய்டன் மார்க்ரமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 2.6 கோடி வாங்கியது. பின்னர் அஜின்க்யா ரஹானே ரூ. 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாபில் ஆல் ரவுண்டர் லிவிங்ஸ்டன்.. ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு !!

இதன்பிறகு, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது. ரூ. 11 கோடியைத் தாண்டிய பிறகும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே போட்டி இருந்தது. இறுதியில் ரூ. 11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்தது.

பஞ்சாபில் ஆல் ரவுண்டர் லிவிங்ஸ்டன்.. ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு !!

லிவிங்ஸ்டன் 17 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி 103 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 23.75. ஸ்டிரைக் ரேட் 158.33. ஆனால், 9 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவரது ஸ்டிரைக் ரேட் 125.84. சர்வதேச டி20 ஆட்டங்களில் அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 19.58 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like