1. Home
  2. தமிழ்நாடு

அடேங்கப்பா.. ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! !

அடேங்கப்பா.. ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! !


ரம்ஜானையொட்டி ஆட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் சென்னை, புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வழக்கமாக ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

அதன்படி இன்று ஆட்டு சந்தை கூடியது. ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஆடு விற்பனை கூடுதலாக நடைபெற்றது. இந்த சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு என விற்பனைக்கு வந்தனர். இந்த ஆடுகளை வியாபாரிகள் லாரி மற்றும் வேன்களில் வந்தவர்கள் ஆடுகளை கொள்முதல் செய்தனர்.

அடேங்கப்பா.. ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! !

இன்று மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ. 4 கோடி மதிப்பில் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

சேலம் ஒமலூர் மாட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் ரம்ஜானையொட்டி கிருஷ்ணகிரி, செஞ்சி, வேப்பூர் சந்தைகளில் மட்டும் 18 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அடேங்கப்பா.. ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! !

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாரச்சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. இதற்கு முன் கிடா 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில், இன்று ஆடு ஒன்றுக்கு, 500 முதல், 2,500 ரூபாய் வரை விலை உயர்வு காணப்பட்டது. அதன்படி, ஒரு ஆடு 15,000 ரூபாய் முதல், 26 ஆயிரம் ரூபாய் வரைக்கும், ஆட்டுக்குட்டிகள், 4,500 முதல், 6,000 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.

மொத்தம், 7,000 ஆடுகள் விற்பனையானதில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் ஒருசிலர் வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like