நடிகை அமலா பால் 2வது திருமணம்.. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல்.. தயாரிப்பாளருக்கு ஜாமீன்..!

நடிகை அமலா பால் 2வது திருமணம்.. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல்.. தயாரிப்பாளருக்கு ஜாமீன்..!

நடிகை அமலா பால் 2வது திருமணம்.. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல்.. தயாரிப்பாளருக்கு ஜாமீன்..!
X

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே பெரியமுதலியார்சாவடி பகுதியில் நடிகை அமலா பால் மற்றும் தயாரிப்பாளர் பவிந்தர் சிங் ஆகிய இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சில மாதங்கள் தங்கியிருந்துள்ளனர்.

அப்போது, இருவருக்கிடையே சொத்து பரிவர்த்தனை நடந்துள்ளது. மேலும் சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பவிந்தர் சிங்கிடமிருந்து அமலாபால் விலகி சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அமலாபால் புகார் மனு கொடுத்திருந்தார். அதில், பவிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னிடம் பணம் பெற்றிருந்தனர். அதை கேட்டபோது நானும் பவிந்தர் சிங்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியிருந்தார்.
குட்டை உடைத்த அமலா பால்... வெளியானது திருமண போட்டோஸில் மறைந்திருக்கும்  ரகசியம்...! | Amala Paul Explain Marriage With Singer Bhavninder Singh  Photos are not real
அதன்பேரில் டிஎஸ்பி இருதயராஜ் தலைமையிலான போலீசார் பவிந்தர் சிங், அவரது தந்தை சுந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பவிந்தர் சிங்கை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் பாலாஜி வானூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி, பவிந்தர் சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், “அமலாபாலும், பவிந்தர்சிங்கும் திருமணம் செய்துகொண்டது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கிலும் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பவிந்தர் சிங்கை ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் அவர் வெளியே வந்துள்ளார். மேலும், அமலாபால் கொடுத்த புகார் பொய்யாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it