நடிகர் சூரி அளித்த புகார்… பிரபல நடிகரின் தந்தை மீது வழக்குப்பதிவு!!

நடிகர் சூரி அளித்த புகார்… பிரபல நடிகரின் தந்தை மீது வழக்குப்பதிவு!!

நடிகர் சூரி அளித்த புகார்… பிரபல நடிகரின் தந்தை மீது வழக்குப்பதிவு!!
X

நடிகர் சூரியின் மோசடி புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டது.

Soori

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரி இதுவரை 3 முறை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த விசாரணையை தொடர்ந்து நடிகர் விஷ்ணு வாஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Soori

நம்பிக்கை மோசடி, பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it