அரசுப் பள்ளிகள் மீது அவதூறு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
X

“அரசுப் பள்ளிகள் மீது சேற்றை வாரி பூசும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும், பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே. இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாக சமூகவலை தளங்களில் அரசுப் பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பி வருவதன் மூலம் அரசுப் பள்ளிகளையும், மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கோ ஒரு சில மாணவர்களின் செயல் வருந்தத்தக்கது. அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். ஆனால், அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள்.

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும், அங்கு படிப்பவர்கள் ஒழுங்கீன மாணவர்கள் மாதிரி சித்தரித்து அல்லது தூண்டுதலால் ஒரு சிலரால் திட்டமிட்டு பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள்.

அரசுப் பள்ளிகள் தான் அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப் பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால், அரசுப் பள்ளிகள் மீது சேற்றை வாரி பூசும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும், பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முதல்வரை வேண்டுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Next Story
Share it