ஆன்ட்ராய்டு போனில் இணையதளத்தில் இதை தான் 95 சதவீதம் பேர் இப்போது பார்க்கிறார்களாம் !! எது தெரியுமா ?

ஆன்ட்ராய்டு போனில் இணையதளத்தில் இதை தான் 95 சதவீதம் பேர் இப்போது பார்க்கிறார்களாம் !! எது தெரியுமா ?

ஆன்ட்ராய்டு போனில் இணையதளத்தில் இதை தான் 95 சதவீதம் பேர் இப்போது பார்க்கிறார்களாம் !! எது தெரியுமா ?
X

இந்தியாவின் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் , இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 2-ம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மேலும், வீடுகளிலேயே டிவி பார்ப்பது, செல்போன்களில் மூழ்குவது, இணைய விளையாட்டுகளை விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் தங்களது பொழுதினை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு சமயத்தில் சிறார்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சிறார்களின் ஆபாச படங்களை தேடுவதும் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அறிக்கையை சமர்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஊரடங்கு காலகட்டத்தில் சிறார் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகரித்தது எப்படி என்பதற்கான விளக்கத்தை வரும் 30-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என பேஸ்புக் , டுவிட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டுவிட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது ;

டுவிட்டரில் கணக்கு தொடங்க 13 வயதே தகுதியானதாக விதிகளை வைத்துள்ளீர்கள். ஆனால், 13 வயது குழந்தை இருக்கும் டுவிட்டர் தளத்தில், ஆபாசமான காட்சிகள், படங்களை பதிவிட அனுமதிக்கக் கூடாது. டுவிட்டரில் குழந்தைகள் ஆபாச படங்கள், இணைப்புகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீஸில், “கூகுள் பிளே ஸ்டோரில் சிறார்களின் ஆபாசப் படங்களை பார்ப்பதற்கான ஆப்கள் அதிகரித்துள்ளன. இது ஆபத்தானதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, வாட்ஸ்ஆப் குரூப்களில் சிறார்களின் ஆபாச படங்கள் பகிரப்படுவது வேதனை அளிக்கும் செயல் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. என்ன தான் அரசு பல கிடுக்குபிடி போட்டாலும் ஆபாச படங்கள் பார்ப்பது மேலும் அதிகரித்து கொண்டே தான் போகிறது , இதை கட்டுப்படுத்த ஒரு நபரின் தனிப்பட்ட எண்ணங்களை மாற்றினால் தான் முழுமையாக மாறும் என்று புலம்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Newstm.in

Next Story
Share it