1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் முடித்து சென்னை திரும்புவோருக்காக 8,200 பஸ்கள்..!

Q

பொங்கல் பண்டிகை கொண்டாட, சென்னையில் இருந்து, அரசு பஸ்களில் 8.73 லட்சம் பேர் வெளியூர் சென்றனர்.

இவர்கள் விடுமுறை முடிந்து, இன்றும், நாளையும் சென்னை திரும்ப உள்ளனர். அவர்கள் வசதிக்காக, பல்வேறு ஊர்களில் இருந்து, சென்னைக்கு இன்று 3,600, நாளை 4,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னை தவிர்த்து முக்கிய நகரங்களில் இருந்து, மற்ற ஊர்களுக்கு, இன்று 1,200; நாளை 3,400 பஸ்கள் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like