ஒரு  கிராம் தங்கம் 8,200 ரூபாய்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஒரு  கிராம் தங்கம் 8,200 ரூபாய்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஒரு  கிராம் தங்கம் 8,200 ரூபாய்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
X

உலகம் முழுவதும் கொரோனா பயத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். சாப்பிடுவதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே பல நாடுகளில், மைல்  கணக்கில் கடை வாசலில் க்யூவில் நிற்கின்றனர்.

ஆனாலும், உலகம் முழுவதுமே பெரும்பாலான மக்கள் வாங்காத  தங்கத்தின் விலை, இன்னமும் குறையாமல் தொடர்ந்து ஏறிக் கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,200 வரையில் கூடிய விரைவில் உயர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கணிப்பு தெரிவித்திருக்கிறார்கள்.உலகளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,750 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. இந்த வருட இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,000 டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.82 ஆயிரமாக உயரும்.  அடுத்த 18 மாதங்களில் தங்கத்தின் விலை 76 சதவீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

Tags:
Next Story
Share it