1. Home
  2. தமிழ்நாடு

80 கி.மீ. தூரம் தனியாக நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த பெண்!

80 கி.மீ. தூரம் தனியாக நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த பெண்!


கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு கிடைப்பதில் கஷ்டம், சுப காரியங்களை நடத்த முடியாத சூழல் என இயல்பு வாழ்க்கை என்பது முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. 

இதனிடையே நெகிழ வைக்கும் சம்பவங்களும், சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் 80 கிமீ தூரம் நடந்து சென்று மணமகனை கரம் பிடித்துள்ளார். கான்பூரைச் சேர்ந்த கோல்தி என்ற பெண்ணுக்கும், கன்னோஜ் பகுதியை சேர்ந்த வீரேந்திர குமாருக்கும் மே 4ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் பொதுமுடக்கம் காரணமாக திருமணத்தை நடத்த முடியவில்லை. இருவரும் தொலைபேசியில் பேசி வந்தனர். 


இந்நிலையில் பொறுமை இழந்த கோல்தி, கான்பூரிலிருந்து 80 கி.மீ., தொலைவில் மணமகன் வீட்டிற்கு தனியாக நடந்து சென்று விட்டார். மணப்பெண் வந்து சேர்ந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை அருகிலுள்ள கோவிலில் எளிமையாக நடத்தி முடித்தனர். மணமக்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைப்பிடித்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like