ஓசூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது..!

ஓசூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது..!

ஓசூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது..!
X

உத்தரபிரதேச மாநிலம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபலி (42). கூலித் தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அச்சந்திரம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார்.

இவர், தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று, மது போதையில் நண்பரின் வீட்டுக்குச் சென்ற சந்திரபலி, அங்கிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது |  Alcohol intoxication Girl sexually harassed Northern worker arrested in  Pokso | Puthiyathalaimurai - Tamil News ...
இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சந்திரபலி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தொழிலாளி சந்திரபலியை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story
Share it