8 மாணவர்களுக்கு கொரோனா - அரசுப் பள்ளிக்கு 3 நாள் பூட்டு..!

 | 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த 1ம் தேதி முதல், 9 முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

திருப்பூர்

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில், திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு நேற்று (14ம் தேதி) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் உத்தரவின்பேரில், சின்னசாமி அம்மாள் பள்ளி இன்று (15ம் தேதி) முதல் வரும் 17ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். ரமேஷ் தெரிவித்துள்ளார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP