7 வயது சிறுமி கொடூர கொலை வழக்கு.. தப்பியோடிய நபர் 15 மணி நேரத்தில் சிக்கினார் !

7 வயது சிறுமி கொடூர கொலை வழக்கு.. தப்பியோடிய நபர் 15 மணி நேரத்தில் சிக்கினார் !

7 வயது சிறுமி கொடூர கொலை வழக்கு.. தப்பியோடிய நபர் 15 மணி நேரத்தில் சிக்கினார் !
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பலில் 2 வாரங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிறுமி கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் வீட்டருகே வசிக்கும் சாமிவேல் என்ற ராஜாவை கடந்த 1-ஆம் தேதி கைது செய்தனர். 

தொடர் விசாரணையில் அவர் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது அம்பலமானதாக போலீசார் கூறுகின்றனர். 

இந்நிலையில் ராஜா மீது போக்சோ சட்டம் பதியப்பட்டதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்தபின்பு பரிசோதனை முடிவுகளை பெற்று கொள்ளச் சென்றபோது, நேற்று ராஜா தப்பியோடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது முள்ளூர் விளக்கு பிரிவு சாலையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் பதுங்கி இருந்த ராஜாவை போலீசார் பிடித்தனர்.

இதனிடையே ராஜா தப்பியோடியது தொடர்பாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


newstm.in


 

Next Story
Share it