79ஆவது நாளாக ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி!!

79ஆவது நாளாக ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி!!
X

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 79ஆவது நாளாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார்.

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் காஷ்மீர் வரை செல்ல இருக்கிறது. இதற்கு இடையே இரண்டு நாட்கள் குஜராத் தேர்தலுக்கான பரப்புரையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப் பிரதேசம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்குள் வந்தார்.மத்தியபிரதேசத்தில் ராகுல்காந்தி 12 நாட்கள், 380 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். நேற்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் போர்கான் பகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கினர். இதில் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் 2ஆவது நாளாக இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it