1. Home
  2. தமிழ்நாடு

சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் , ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவு !! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு..

சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் , ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவு !! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு..


அமெரிக்காவில் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களில் ஒன்றாக அலாஸ்காவும் இருந்து வருகிறது. இங்கு கடந்த 16 ம் தேதி முதல் ரிக்டர் அளவுகோளில் 3 என்ற அளவிலான மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென அங்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறு சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த சக்திவாய்ந்த நில நடுக்கம் பெர்ரிவில் நகருக்கு தென்கிழக்கில் 96 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெற்கு அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம் மற்றும் அலுடியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இருப்பினும் வட அமெரிக்காவின் பிற மாகாணங்கள் மற்றும் கனடா பசிபிக் கடற்கரைகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில் கடந்த 1964ம் ஆண்டு 9.2 என்ற அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. வட அமெரிக்காவில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் சுனாமியாலும், நிலநடுக்கத்தாலும் உயிரிழந்தனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like