உடலில் காயங்களுடன் தொடங்கிய 7 மாத கர்ப்பிணி..! கணவரை பிடித்து விசாரணை..!

உடலில் காயங்களுடன் தொடங்கிய 7 மாத கர்ப்பிணி..! கணவரை பிடித்து விசாரணை..!

உடலில் காயங்களுடன் தொடங்கிய 7 மாத கர்ப்பிணி..! கணவரை பிடித்து விசாரணை..!
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்(23). இவர் அதேபகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்ணை கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. 
 
இதேபோல் தொடர்ந்து பிரச்னை வர அஜித் பூங்கொடியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பூங்கொடி கோபித்துக்கொண்டு அவரது உறவினரான ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சுமதி வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கும் சென்று வீட்டுக்கு வரும்படி அஜித் அவரை தாக்கி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான அவர் தனி அறையில் உடல் முழுவதும் காயங்களுடன் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்த நிலையில் பூங்கொடி கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து 7 மாத கர்ப்பிணியான அக்காள் மகள் பூங்கொடி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனால் அஜீத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுமதி என்பவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ப்பிணியின் கணவரான அஜித்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in 


 

Next Story
Share it